இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பல் தொடர்பில் உங்கள் வாழ்நாள் முழுவதும் எந்த மருத்துவமும் தேவைப்படாத ஒரு அருந்துலக்கி

படம்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்பது பல் வலிமைக்கும், உங்கள் தமிழ்ப் புலமைக்கும் தமிழ்ச்சொலவடை பரிந்துரைக்கும் நான்கு கருவிப் பொருட்கள் ஆகும். ஆம் அவை வேலங்குச்சி, ஆலங்குச்சி, நாலடி நானூறு, திருக்குறள் ஆகியனவாகும். இங்கே சந்தைப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ள பொருள் வேலங்குச்சியாகும். வேலங்குச்சியால் பல்துலக்கும் போது, உங்கள் பல் தொடர்பில் உங்கள் வாழ்நாள் முழுவதும் எந்த மருத்துவமும் தேவைப்படாது என்பது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள் வழங்கும் சான்றிதழ் ஆகும். பல்துலக்க வேலங்குச்சி கிராமத்துச் சந்தைகளில் பேரளவாகக் கிடைக்கும் ஆனால் நகரத்தில் உங்களுக்கு அது கிடைக்காது. மாற்றாக அதற்கு ஈடான ஒரு பல்பொடி சந்தையில் கிடைக்கிறது என்பது நமது பல் பேணுதலுக்கான அரும்பெரும் வாய்ப்பு ஆகும். இந்தப் பல்பொடியின் மருத்துவ அடிப்படை துவர்ப்பு ஆகும். துவர்ப்பு குறித்த விரிவான செய்திக்கு இந்த இணைப்பில் சென்று படிக்க முடியும்.  http://www.news.mowval.in/Editorial/katturai/Abrasion-194.html அந்தப் பல்பொடியை இயங்கலையில் இருந்து வாங்க கீழேயுள்ள பல்பொடியின் படத்தைத் தொட்டு இணைப்பிற்கு