இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய மிடுக்குப்பேசி சந்தையில் ரெட்மி நோட் 12 வரிசை செல்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

படம்
இந்திய மிடுக்குப்பேசி  சந்தையில் ரெட்மி நோட் 12 வரிசை செல்பேசிகள்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 புரோ மற்றும் ரெட்மி நோட் 12 புரோ பிளஸ் என மூன்று  செல்பேசிகள்   இந்த வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இந்த செல்பேசிகளை அமேசான் சந்தையில் வாங்க இன்னும் ஆறு நாட்கள் காத்திருக்க வேண்டும். சீன நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. மலிவு விலையில்  செல்பேசி களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய  செல்பேசி களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ரெட்மி நோட் 12  வரிசை  மிடுக்குப்பேசி ளை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மூன்று மாடல் வகைகளிலும் பின்பக்கத்தில் மூன்று படக்கருவிகள் உள்ளன. விலை மற்றும் வகையைப் பொறுத்து முதன்மைப் படக்கருவியின் பிக்சல் மாறுபடுகிறது ரெட்மி நோட் 12 5ஜி பேசியின் விலையை பொறுத்தவரையில் 4ஜிபி ரேம் 128ஜிபி சேமிப்பகம் திறன் கொண்ட பேசியின் விலை ரூ.17,999. 6ஜிபி ரேம் 128ஜிபி சேமிப்பகம் திறன் கொண்ட பேசியின் விலை ரூ.19,99