இந்திய மிடுக்குப்பேசி சந்தையில் ரெட்மி நோட் 12 வரிசை செல்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன



இந்திய மிடுக்குப்பேசி சந்தையில் ரெட்மி நோட் 12 வரிசை செல்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 புரோ மற்றும் ரெட்மி நோட் 12 புரோ பிளஸ் என மூன்று செல்பேசிகள் இந்த வரிசையில்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செல்பேசிகளை அமேசான் சந்தையில் வாங்க இன்னும் ஆறு நாட்கள் காத்திருக்க வேண்டும்.

சீன நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. மலிவு விலையில் செல்பேசிகளை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய செல்பேசிகளை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ரெட்மி நோட் 12 வரிசை மிடுக்குப்பேசிளை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மூன்று மாடல் வகைகளிலும் பின்பக்கத்தில் மூன்று படக்கருவிகள் உள்ளன. விலை மற்றும் வகையைப் பொறுத்து முதன்மைப் படக்கருவியின் பிக்சல் மாறுபடுகிறது

ரெட்மி நோட் 12 5ஜி பேசியின் விலையை பொறுத்தவரையில் 4ஜிபி ரேம் 128ஜிபி சேமிப்பகம் திறன் கொண்ட பேசியின் விலை ரூ.17,999. 6ஜிபி ரேம் 128ஜிபி சேமிப்பகம் திறன் கொண்ட பேசியின் விலை ரூ.19,999

ரெட்மி நோட் 12 புரோ 5ஜி பேசியைப் பொறுத்தவரையில் 6ஜிபி ரேம் 128ஜிபி சேமிப்பகம் திறன் கொண்ட பேசியின் விலை ரூ.24,999, அதுவே 8ஜிபி 128ஜிபி பேசியின் விலை ரூ.26,999 மற்றும் 8ஜிபி 256ஜிபி பேசியின் விலை ரூ.27,999

ரெட்மி நோட் 12 புரோ பிளஸ் 5ஜி பேசியைப் பொறுத்தவரையில் 8ஜிபி 256ஜிபி பேசியின் விலை ரூ.29,999. அதுவே 12ஜிபி 256ஜிபி பேசியின் விலை ரூ.32,999

இந்த பேசிகளை 11.01.2023 பிற்பகல் 12.00 மணிக்கு அமேசான் இயங்கலைச் சந்தையில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையில் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதற்கான இணைப்பு: https://amzn.to/3jW3upN

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பல் தொடர்பில் உங்கள் வாழ்நாள் முழுவதும் எந்த மருத்துவமும் தேவைப்படாத ஒரு அருந்துலக்கி

மந்திரம் வலைக்காட்சி காணொளி: கடவுளிடம் எனக்கான சொந்த இடத்தை நான் எப்படி உருவாக்குவது?

வினாவுக்குச்செலவு - விடைக்கு வருமானம்